Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழையால் : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வில் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது தெரியவந்துள்ளது. அதாவது கடந்தாண்டை காட்டிலும் 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து