வெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தோல்வி - சித்தராமையா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      இந்தியா
Siddaramaiah 2019 09 10

 பெங்களூரு : வெங்காய விலையை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்து விட்டதாக கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். 

வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ சுமார் ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

வெங்காய விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. மக்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு உடனே இறக்குமதி செய்திருக்க வேண்டும். 

கள்ளச்சந்தையில் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காமல், மத்திய-மாநில அரசுகள் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து