முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி கடல் வளிமண்டல சுழற்சி தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாகப்பட்டினம், சிவகங்கை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை  மையம் தெரிவித்துள்ளது.  அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 8 செ.மீ. மழையும், தங்கச்சிமடத்தில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மணிக்கு 40-50 கி.மீ. வேகத்துக்கு சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுப் பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து