ஏமன் போருக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது: சூடான் பிரதமர்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      உலகம்
yemen war 2019 12 08

ஏமன் : ஏமன் போருக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்று சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்தக் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சவுதி, ஏமன் போரை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இதுகுறித்து சூடான் பிரதமர் அப்தால்ல ஹம்தக் கூறும் போது, ஏமன் போரை குறித்து கூறினால் ஏமன் போரை ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது. அது எங்கள் தரப்பிலிருந்து வந்தாலும் சரி உலகின் எந்த தரப்பிலிருந்து வந்தாலும் சரி போரை அமைதி மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து