டெல்லி தீ விபத்தில் உயிரிழந்த பீகாரை சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2019      இந்தியா
Nitish Kumar 2019 12 08

பாட்னா : டெல்லி தீ விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

டெல்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மின்கசிவுக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்காலம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, டெல்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசும், டெல்லி அரசும் நிதியுதவி அறிவித்துள்ள நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து