370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை: அமித்ஷா

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      இந்தியா
amit shah 2019 06 09

புது டெல்லி : 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் அமித்ஷா தெரிவித்தார்.

உன்னாவ் பெண் கற்பழித்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காஷ்மீரில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-

காஷ்மீரில் தலைவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை. உள்ளூர் நிர்வாகம் அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும்.370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவமும் நடைபெற வில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை. அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது. 99.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து