முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் - முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா?

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

லாகூர் : தேச துரோக வழக்கு விசாரணையின்போது படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் என்று கோர்ட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 76). இவர் 2007-ம் ஆண்டு, அதிபராக இருந்த போது பாகிஸ்தானின் அரசியல் சட்டத்தை முடக்கி, நெருக்கடி நிலையை அறிவித்தார். இது தொடர்பாக முஷரப் மீது லாகூர் ஐகோர்ட்டில் தேச துரோக வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு துபாய் சென்றார். இன்னும் நாடு திரும்பவில்லை. தற்போது துபாய் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தான் உடல்நலம் பெற்று, நேரில் ஆஜராகும் வரையில், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று லாகூர் ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடக்கிறது. இதற்கு மத்தியில், ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் என்று கோர்ட்டுக்கு முஷரப் வீடியோ செய்தி அனுப்பி உள்ளார். இதை கோர்ட்டு ஏற்குமா என தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து