எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டில் மாற்றம் இல்லை - அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதி

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      தமிழகம்
minister vijayabaskar 2019 06 29

சென்னை  : மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான  இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது  என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

தமிழ்நாட்டில் வரலாற்று நிகழ்வாக ஒரே  நேரத்தில் ஒன்பது அரசு மருத்துவக்  கல்லூரிகளை அரசு தொடங்கியுள்ளது.  இதற்காக தலா நூறு கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. அதற்கான பணிகள்  விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மேலும், கூடுதலாக கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில்  மத்திய அரசிடம் அதற்கான கடிதத்தை அளித்துள்ளோம். மத்திய அரசின்  தொழில்நுட்பக் குழு விரைவில் ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என  எதிர்பார்க்கிறோம். மருத்துவ இட ஒதுக்கீடு முறையில் மாற்றம் இல்லைஇந்தியாவில் பிற  மாநிலங்களில் இருந்து புதிய மருத்துவக்  கல்லூரிக்கு 100 இடங்களை மட்டுமே  கேட்கின்றனர்.

ஆனால் தமிழ்நாடு மட்டுமே 150 இடங்களில்  கேட்டு விண்ணப்பித்துள்ளோம். பெறப்படும் இடங்களில் அகில இந்திய மருத்துவ  கவுன்சில் விதிமுறைகளின்படி 15 விழுக்காடு  இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு  அளிக்கப்படும். மற்ற 85 விழுக்காடு  இடங்கள் முழுவதுமாக தமிழ்நாடு  மாணவர்களுக்கு அளிக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு  மாணவருக்கு ஆண்டுக் கட்டணமாக 13 ஆயிரத்து 400 ரூபாய் மட்டுமே வசூல்  செய்யப்படுகிறது. தற்போது பின்பற்றப்படும்  கூடிய மருத்துவ இட ஒதுக்கீட்டு முறையில்  எந்தவித மாற்றமும்  கிடையாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட  ஒதுக்கீடு அளிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் சமூகநீதிக்கு பாதிப்பு  வரும் எந்தவித இட ஒதுக்கீட்டையும் அரசு  நடைமுறைப்படுத்தாது என முடிவெடுத்துள்ளோம். பொருளாதாரத்தில்  பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான  இட ஒதுக்கீட்டில் பெறக்கூடிய இடங்களை  விட கூடுதலான இடங்களை நாம்  பெற்றுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து