Idhayam Matrimony

டுவிட்டரில் இணைந்த ரிக்கி பாண்டிங்: மகனுடன் வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டார்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (வயது 44). ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய 3 போட்டி முறைகளிலும் கேப்டனாக இருந்தவர்.

கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி 27 ஆயிரத்து 486 ரன்களை சேர்த்துள்ள இவர், சர்வதேச போட்டிகளில் அதிக சதங்களை அடித்து வேறு எந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை படைத்துள்ளார்.

உலக கோப்பை போட்டிகளில் கடந்த 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியை தலைமையேற்று நடத்தி சென்று இரு முறை வெற்றி பெற வைத்தவர். கடந்த 2012-ம் ஆண்டு அவர் டெஸ்ட் போட்டியில் இறுதியாக விளையாடினார்.

ஐ.பி.எல். போட்டிகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கான பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். முகநூலில் முன்பே இணைந்து விட்ட அவர் சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டரில் நேற்று இணைந்துள்ளார்.

டுவிட்டரில் முதன்முறையாக இணைந்துள்ள ரிக்கி பாண்டிங் தனது மகனுடன் கிரிக்கெட் போட்டிக்கான வலை பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். அதில் அவரது மகன் பிளெட்சர் அருகே முழங்கால் போட்டபடி கையில் பேட் ஒன்றை எடுத்து மகனிடம் கொடுப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. அவருக்கு 11 ஆயிரத்து 800 பேர் பின்பற்றுபவர்களாக உள்ளனர். அவருக்கு கேபிட்டல்ஸ் அணி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து