Idhayam Matrimony

உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்

செவ்வாய்க்கிழமை, 8 ஜூலை 2025      உலகம்
Trump-Zelensky 2024-11-16

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், உக்ரைனுக்கு 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்க உறுதி அளித்திருந்தார். அதேநேரத்தில், டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜனவரியில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும். என கடந்த வாரம் மாளிகை அறிவித்தது. இந்நிலையில், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அளிக்க ட்ரம்ப் முன்வந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து