எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
விழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் திருநாளான நேற்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இந்து சமய அறநிலையத்துறை சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் சிவாய நமக, நமச்சிவாய கோஷங்கள் விண் அதிர தேர் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தது. இதனை அடுத்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. தேர்த் திருவிழாவையொட்டி பாதுகாப்புப் பணியில் 8000 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், நயினார் நாகேந்திரன், மாவட்ட கலெக்டர், மேயர் ராமகிருஷ்ணன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


