முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. தாக்குதல் நடத்தப்பட்டதன் நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை - துணை ஜனாதிபதி - அமைச்சர்களும் பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாராளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 18-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாதிகள் 5 பேர் இயந்திர துப்பாக்கிகளுடன் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வரிசையாக அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பின்னர், பாராளுமன்றத்திற்கு ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினரும், பாராளுமன்ற பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் டெல்லி காவல்துறையினர் 5 பேர், மத்திய ரிசர்வ் காவல்படை பெண் காவலர், பாராளுமன்ற பாதுகாவலர்கள் இருவர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, வீரமரணம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் பாராளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங்  உள்ளிட்ட பலரும் உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். கடந்த 2001-ம் ஆண்டு தாக்குதலுக்குப் பிறகு பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து