தேர்தல் தோல்வி எதிரொலி: பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 13 டிசம்பர் 2019      உலகம்
British opposition leader resigns 2019 12 13

லண்டன் : பிரிட்டன் எதிர்க்கட்சி தலைவர் ஜெரோமி கோர்பன், தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு  தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளில், அதிக இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் முன்னிலை பெற்றுள்ளார். இதனால், மீண்டும் அவர் பிரதமராவார் என்று தெரிகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் எதிர்க்கட்சி தலைவரான ஜெரோமி கோர்பன் தொழிலாளர் கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, ராஜினாமா செய்திருப்பதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து