முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க வேட்பாளர் பட்டியல் மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் வெளியிட்டார்: மாற்றங்கள் இருக்குமென வெளியான தகவலால் பரபரப்பு:

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க வேட்பாளர் பட்டியலை மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன் வெளியிட்டு நிலையில் கட்சியினரின் அதிருப்தி காரணமாக வேட்பாளர் பட்டியலில் சில மாற்றங்கள் இருக்குமென வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தி.மு.க தலைமை கழக அறிவிப்பின்படி மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மு.மணிமாறன், நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் வார்டுகளின் பட்டியலையும் வெளியிட்டார்.அதன்படி மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 9இடங்களிலும்,திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் 16இடங்களிலும்,கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 11இடங்களிலும்,கள்ளிக்குடி ஒன்றியத்தில் 15இடங்களிலும், திருமங்கலம் ஒன்றியத்தில் 11இடங்களிலும்,சேடபட்டி ஒன்றியத்தில் 17இடங்களிலும், உசிலம்பட்டி ஒன்றியத்தில் 12இடங்களிலும்,செல்லம்பட்டி ஒன்றியத்தில் 13இடங்களிலும் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதனை தவிர்த்து மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ்,ம.தி.மு.க,விடுதலை சிறுத்தைகள்,கம்யூனிஸ்டுகள் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேட்பாளர்கள் தேர்வு மற்றும் கூட்டணி கட்சியினருக்கான இட ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக அதிருப்தியிலுள்ள கட்சியினரை சமாளித்திடும் வகையிலும்,விரக்தியிலுள்ள கூட்டணி கட்சியினரை சமாதானம் செய்திடும் விதத்திலும் வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் மூலம் சர்ச்சைகள் ஏதுமின்றி தேர்தலை சந்தித்திட மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க தயாராகி வருகிறது.ஆனால் வேட்புமனு தாக்கல் செய்யவதற்கு கடைசி நாளான இன்று வேட்பாளர்கள் மாற்றம்,கூட்டணியினருக்கு கூடுதல் இட ஒதுக்கீடு என பல்வேறு தலைவலிகள் உருவாகி வருகிறது.அதனால் கட்சியின் அங்கீகார கடிதம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் இன்றைய தி.மு.க வேட்பாளர்கள் என்பது உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் உடன்பிறப்புகள் உற்சாகமிழந்து வருகிறன்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து