முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக ஹர்ஷ் வர்தன் நியமனம்

திங்கட்கிழமை, 23 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் விஜய் கோகலேவின் பதவிக்காலம் நிறைவடைவதால் புதிய செயலாளராக அமெரிக்காவுக்கான தூதர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் பதவிக்கு அடுத்தபடியாக வெளியுறவுத்துறை செயலாளர் பதவியும் அவரது பணிகளும் முக்கியத்துவமானது. இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் விஜய் கோகலேவின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் புதிய செயலாளராக ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா நியமிக்கப்பட்டுள்ளார். வெளியுறவுத்துறை விவகாரங்களில் நீண்டகால அனுபவம் பெற்றவரான ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா தற்போது அமெரிக்காவுக்கான தலைமை தூதராக பணியாற்றி வருகிறார். விஜய் கோகலேவிடம் இருந்து வெளியுறவுத்துறை செயலாளருக்கான பொறுப்புகளை 29-1-2020 அன்று ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா ஏற்றுக் கொள்வார் என மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து