முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகில் முதன்முதலாக புத்தாண்டை கொண்டாடிய நியூசிலாந்து மக்கள்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

வெலிங்டன் : நியூசிலாந்து நாட்டு மக்கள் உலகில் முதன்முதலாக ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை நேற்று மாலை வரவேற்று மகிழ்ந்தனர்.

பூமிப் பந்தின் கிழக்கு திசையின் கடைக்கோடியில் ஆஸ்திரேலியா, ஓசியானியா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் முதன்முதலாக சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது.

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் உள்ள நேர வித்தியாசம் நம்மைவிட ஏழரை மணிநேரம் கூடுதலாகும். இந்நிலையில், (இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணியளவில்) நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வாணவேடிக்கை என கோலாகலமாக 2020 - ம் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் இந்தியாவிலும் புத்தாண்டு பிறந்தது. இதை பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், ஆடிப்பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து