முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி கோலியின் உருவ படத்தை உருவாக்கிய ரசிகர்

திங்கட்கிழமை, 6 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

கவுகாத்தி : கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பழைய செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கவுகாத்தியை சேர்ந்த ராகுல் பரேக் என்ற கிரிக்கெட் ரசிகர் ஒருவர் பழைய செல்போன்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உருவப்படத்தை உருவாக்கியுள்ளார். வெவ்வேறு வடிவிலான உதிரிபாகங்கள்,வயர்களை கச்சிதமாக இணைத்து தத்ரூபமாக கோலியின் உருவத்தை கொண்டு வந்து ஆச்சரியப்பட வைத்தார். அந்த ரசிகரை விராட் கோலி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் இந்த ஓவியத்தில் தனது ஆட்டோகிராப்பையும் பதிவிட்டார். பிறகு கோலிக்கு அந்த ஓவியத்தை பரிசாக ராகுல் பரேக் வழங்கினார். இதற்காக பகல் -இரவு பாராமல் 3 நாட்கள் செலவிட்டதாக அந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து