திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Tirupati 2020 01 17

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அப்போது வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தனர். அப்போது (45 வயது) மதிக்கத்தக்க பக்தர் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மார்பை பிடித்து கொண்டு கீழே சரிந்து விழுந்தார். 

இதனைக் கண்டு திடுக்கிட்ட பக்தர்கள் இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் அவரை மீட்டு திருப்பதி ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து திருப்பதி ஒன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் சட்டை பாக்கெட்டில் சோதனை செய்தனர். அப்போது வேலூரில் இருந்து திருப்பதிக்கு சென்றதற்கான பஸ் டிக்கெட் இருந்தது. இறந்தவர் வேலூரை சேர்ந்தவரா? அல்லது பக்கத்து மாவட்டமான திருப்பத்தூர், தருமபுரியை சேர்ந்தவரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து