தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2020      வர்த்தகம்
gold rate 2020 01 18

சென்னை  : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 128 உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. புத்தாண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 30,624-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமிற்கு ரூ.16 உயர்ந்து ரூ.3,828-க்கு விற்பனையானது. அதே சமயம் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ. 50.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து