காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      இந்தியா
kashmir encounter 2020 01 20

காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  

ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையின் போது, பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதற்கு பாதுகாப்பு படை மற்றும் போலீசார் தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டது. இதுபற்றி காஷ்மீர் மண்டல போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவர்களின் அடையாளங்கள் மற்றும் எந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆகியவற்றை உறுதி செய்யும் பணி நடைபெறுகிறது என்று தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து