அம்மா பேரவை மற்ற சார்பு அணியை காட்டிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பாராட்டு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2020      தமிழகம்
O Panneer Selvam 2020 01 20

சென்னை : அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்   துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது:

கழகம் இன்று ஆலமரம் போல் பரந்து விரிந்து உள்ளது நம்மை வெல்ல யாராலும் முடியாது அந்த நிலைப்பாட்டை நமக்கு உருவாக்கித் தந்தவர்  அம்மா ஆவார் 
அம்மாவின் திருநாமத்தை கொண்டு இருக்கும் அம்மா பேரவை, அம்மாவின் சாதனைகளை, அம்மாவின் தியாகத்தை ஆகியவற்றை உலகிற்கு எடுத்துச் எடுத்துச் செல்லும் வகையில் நல்ல பணிகளை செய்து வருகிறது அதை மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம் தற்பொழுது இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது 

அம்மா இருக்கும்போது தனது பிறந்த நாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டிருந்தார் இந்தியாவிலேயே பல்வேறு இயக்கம் உள்ளது அந்த அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பிறந்த நாள் விழாவை விமரிசையாக கொண்டாடுவார்கள் அதை நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம் 

ஆனால் அம்மாவோ பிறந்த நாளன்று எனது இல்லம் நாடி வர வேண்டாம் ஏழை எளிய மக்களின் நாடி சென்று நலத்திட்ட உதவி வழங்குங்கள்  என்று நமக்கு அன்பான கட்டளையிட்டார் இந்தியாவில் உள்ள கட்சித் தலைவர்கள் எல்லாம் தங்கள் இல்லம் நாடி வந்து தொண்டர்கள் வரவேற்க வேண்டும் என்ற நிலையில் ஏழை எளிய மக்கள் இல்லத்திற்கு சென்று உதவுங்கள் என்று இந்தியாவிலேயே சொல்லிய ஒரே தலைவர் நமது அம்மா ஒருவர்தான் 

அம்மாவின் சிந்தனையும் செயலும் நாட்டு மக்களுக்காக தான் இருந்தது தனது பொதுவாழ்வில் ஏழை எளிய மக்கள் துன்பப் படக்கூடாது என்ற மன உறுதியை அம்மா கொண்டிருந்தார்  அம்மாவின் பொற்கால ஆட்சியில் கூட மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை ஏழை எளிய மக்களின் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கு ஒதுக்கினார் வாழ்வில் அடித்தட்டு மக்கள் எல்லாம் உயர்தட்டு மக்களுக்கு சமமாக நிலைக்குநிறுத்த வேண்டும் என்பது அம்மாவின் முயற்சி அந்த முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளது கழக அம்மா பேரவை செயலாளர் ஆர் பி உதயகுமார் அம்மாவின் பிறந்தநாள் விழாவில் இலவச திருமணம், மருத்துவ முகாம், கல்வி உபகரணம் வழங்கும் விழா, கண்தானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் அம்மா பேரவை மற்ற சார்பு அணியை காட்டிலும் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது கழகத்தின் சார்பு அணிகளுக்கு வழிகாட்டும் அணியாக கழக அம்மா பேரவை திகழ வேண்டும் என்று அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து