முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர மாநிலத்தில் மேல் சபையை கலைக்க ஜெகன் மோகன் முடிவு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

  அமராவதி : ஆந்திராவில் மேல் சபையை கலைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.   

ஆந்திர சட்டசபையில் மேல் சபை உள்ளது. இந்த நிலையில் அரசு கொண்டு வரும் மசோதாக்களை மேல்  சபையில் எதிர்க்கட்சியினர் தடுப்பதால் மேல் சபையை கலைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆந்திர சட்டசபை சிறப்பு கூட்டத்தில் பேசியதாவது:-

ஆந்திர மாநிலம் சம வளர்ச்சி பெறுவதற்காக மூன்று தலைநகர் மசோதா மற்றும் சி.ஆர்.டி.ஏ.வை ரத்து செய்ததற்கான மசோதா ஆகியவற்றை சட்டசபையில் நிறைவேற்றி மேல் சபைக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் அந்த மசோதாக்களை மேல் சபை தலைவர் அரீப் நிபந்தனைகளை மீறி தேர்வு கமிட்டியின் பரீசிலைனைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

ஏழை குழந்தைகளும் ஆங்கில வழியில் கல்வி படிக்க வேண்டும் என்று சட்ட மசோதா கொண்டு வந்தால் அதையும் தடுக்கிறார்கள். ஆனால், மசோதாவை தடுப்பவர்களின் பிள்ளைகள் மட்டும் ஆங்கில வழிக்கல்வி படிக்கலாம்.

மேல் சபைக்காக மக்கள் வரிபணத்தில் இருந்து ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவு செய்யப்படுகிறது. மக்களின் பணத்தால் செயல் படும் மேல் சபை, மக்கள் நல திட்டங்களை தடுக்கிறது.

நாட்டில் 6 மாநிலத்தில் மட்டுமே சட்டமேல் சபை உள்ளது. ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் தவிக்கும் மாநிலத்தில் இந்த சட்ட மேல் சபை தேவையா? இல்லையா? என்பது குறித்து விவாதம் செய்வதற்காக வருகிற 27-ந் தேதி சட்டசபை சிறப்பு கூட்ட தொடர் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து