முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஏ.ஏ.வை ஆதரித்த மக்களுக்கு கேரளாவில் தண்ணீர் சப்ளை மறுப்பு - பா.ஜ.க. எம்.பி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்த குடும்பங்களுக்கு தண்ணீர் சப்ளை மறுக்கப்பட்டதாக பா.ஜ.க எம்.பி ஷோபா வெளியிட்ட டுவிட்டர் பதிவு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.   

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க பேரணி நடத்தி மக்களிடம் சட்டத்தின் அம்சங்களை விளக்கி வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஷோபா கரண்ட்லஜே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள குட்டிபுரத்தைச் சேர்ந்த இந்துக்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்ததால் அவர்களுக்கு தண்ணீர் சப்ளை மறுக்கப்பட்டுள்ளதாகவும், சேவா பாரதி அமைப்பினர் தண்ணீர் வழங்கியதாகவும் ஷோபா கூறியிருந்தார். கேரளா மாநிலம் மற்றொரு காஷ்மீர் ஆக நகர்வதாகவும் ஷோபா குறிப்பிட்டார். இந்த பதிவை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை பதிவிட்டனர்.  

இந்நிலையில் பா.ஜ.க எம்.பி ஷோபா கரண்ட்லஜே, மதநல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி, மலப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஷோபா கரண்ட்லஜே மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதது பற்றிய தகவல், சேவா பாரதியால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாகவும், சேவா பாரதி அப்பகுதியில் உள்ள சில குடும்பங்களுக்கு டேங்கர்களில் தண்ணீர் வழங்கியதாகவும் மற்றொரு அதிகாரி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து