முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசேனாவின் நிறமும், உள் உணர்வும் காவிதான்: உத்தவ் தாக்கரே

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : சமீபகாலமாக நாம் காவியை (இந்துத்வா கொள்கை) விட்டுவிட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. சிவசேனாவின் நிறமும், உள் உணர்வும் காவி தான் என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பேசினார்.   

சிவசேனாவை சோ்ந்தவரை முதல்  மந்திரி ஆக்குவேன், என பால்தாக்கரேவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக உத்தவ் தாக்கரேவுக்கு அவரது கட்சியினர் பாராட்டு விழா நடத்தினர். மும்பை பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் நடந்த இந்த பிரமாண்ட விழாவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:- 

நான் சில மாதங்களுக்கு முன்பே முதல் மந்திரியாக பதவி ஏற்ற போதும், இதுவரை எந்த பாராட்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் இந்த பாராட்டை நான் ஏற்றுக்கொண்டேன். ஏனெனில் இது எனக்கான பாராட்டு அல்ல. உங்களுக்கானது. சவால்களை கண்டு நான் எப்போதும் அஞ்சியது கிடையாது. ஆனால் எனக்கு உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் தேவை. 

வெளியாட்கள் மட்டும் அல்ல நம்முடன் இருந்தவர்கள்(பா.ஜனதாவினர்) நம் மீது நடத்திய தாக்குதலையும் பாதுகாப்பு கவசத்தால் வீழ்த்தி உள்ளோம்.  

சமீபகாலமாக நாம் காவியை (இந்துத்வா கொள்கை) விட்டுவிட்டதாக பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. நிச்சயமாக இல்லை. நாம் மாறவில்லை. நான் நமது பழைய அரசியல் எதிரிகளுடன் சேர்ந்து புதிய அரசியல் பாதையை தேர்வு செய்தேன். அதற்காக நமது நிறத்தை மாற்றவில்லை. தற்போதும் நமது கட்சியின் நிறமும், உள் உணர்வும் காவி தான். இதுபோன்ற பொறுப்பை (முதல்-மந்திரி பதவி) ஏற்றுக்கொள்வேன் என கனவில் கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து