முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி

சனிக்கிழமை, 25 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

புளோம்பாண்டீன் : ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் புளோம்பாண்டீனில் நேற்று முன்தினம் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, நியூசிலாந்துடன் மோதியது. ‘டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை கொட்டியது. அப்போது ஜெய்ஸ்வால் 57 ரன்னுடனும், திவ்யான்ஷ் சக்சேனா 52 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மழையால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டதால் மேற்கொண்டு இந்திய அணி பேட்டிங் செய்யவில்லை. அதன் பிறகு டக்வொர்த்- லீவிஸ் விதிமுறைப்படி 23 ஓவர்களில் நியூசிலாந்து அணி 192 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய நியூசிலாந்து 21 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிபிஷ்னோய் 4 விக்கெட்டுகளும், அதர்வா அங்கோல்கர் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். ஏற்கனவே இலங்கை, ஜப்பானை வீழ்த்தியிருந்த இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாக (ஹாட்ரிக்) பதிவானது. தனது பிரிவில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை வருகிற 28-ம் தேதி சந்திக்கிறது. தோல்வி அடைந்தாலும் நியூசிலாந்து அணி (3 புள்ளி) கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த பிரிவில் நேற்று கடைசி லீக்கில் இலங்கை - ஜப்பான் அணிகள் மோதின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து