நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: ராகுலின் மாயாஜாலத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      விளையாட்டு
india win 2020 01 26

ஆக்லாந்த் : நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 7.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து டுவென்டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

நியூசிலாந்து அணிக்கு கப்டில், மன்ரோ துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்த போது, கப்டில் (33) ஆட்டமிழந்தார். ஷிவம் துபே பந்தில் மன்ரோ (26) அவுட்டானார். ஜடேஜா சுழலில் கேப்டன் வில்லியம்சன் (14), கிராண்ட்ஹோம் (3) சிக்கினர். டெய்லர், செய்பெர்ட் இணைந்து ஒன்றிரண்டு ரன்களாக சேர்த்தனர். பும்ரா வேகத்தில் டெய்லர் (18) அவுட்டானார். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. செய்பெர்ட் (33) அவுட்டாகாமல் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 2 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலும் களம் இறங்கினார்கள். டிம் சவுதி வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா வெளியேறினார். அடுத்ததாக ராகுலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து ஆடும் என எதிர்பார்க்கப்பட்டபோது 6-வது ஓவரில் சவுதி பந்தில் கோலி அவுட்டானார். இதனால் அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டிய பொறுப்பு கே.எல். ராகுல், ஷிரேயாஸ் அய்யர் இணையிடம் வந்தது.  அந்த இணை அப்பொறுப்பை சிறப்பாக செய்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. 17-வது ஓவரில் ஷிரேயாஸ் அய்யர் வெளியேறினாலும், ராகுல்-சிவம் தூபே இணை 133 ரன்கள் இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் ரன்கள் 57 அடித்தார். ஷிரேயாஸ் அய்யர் 44 ரன்கள் அடித்தார். நேற்றைய போட்டியில் வென்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2/0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து