எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 83 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளையும், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 25 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு10 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 35 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும் என மொத்தம் ரூபாய் 83 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பணிமனை வாகனங்கள்
2018-19ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில், அரசு தானியங்கி பணிமனை இல்லாத மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு துறை ஊர்திகள் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனை தவிர்த்திடும் பொருட்டு தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அம்மா அரசு நடமாடும் பணிமனை முன்னோட்ட அடிப்படையில் இரண்டு மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை சார்பில் முதற்கட்டமாக, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டிற்காக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
முன்பதிவு செய்ய செயலி
அவசர வேலை காரணமாக உடனடியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செல்லிடைப் பேசி தனிச்செயலி வழி முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களில், 36 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநனராகவும் 188 வாரிசுதாரர்களுக்கு நடத்துனராகவும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
மேலும், அரசு போக்குவரத்து கழகங்களில் 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணிநியமனம் செய்யப்பட்ட 1,828 சேம ஓட்டுநர்கள் மற்றும் 537 சேம நடத்துனர்களில், தகுதி பெற்ற 1,112 ஓட்டுநர்கள் மற்றும் 162 நடத்துனர்களுக்கு தினக்கூலி ஓட்டுநர் மற்றும் தினக்கூலி நடத்துனர்களாக பதவி மாற்றம் செய்வதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 சேம ஓட்டுநர்கள் மற்றும் சேம நடத்துனர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இளங்கோவன், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கணேசன், மோட்டார் வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் செந்தில்வேலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


