ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் டொமினிக் தீம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2020      விளையாட்டு
Dominic beat nadal 2020 01 29

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடாலை வீழ்த்தி டொமினிக் தீம் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 8-வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 3-6, 7-6 (8-6), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ்சை வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற நடாலுக்கு 3 மணி 38 நிமிடம் தேவைப்பட்டது. கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நடால் கால்இறுதிக்கு முன்னேறுவது இது 41-வது முறையாகும். இதன் மூலம் அதிக முறை கால்இறுதிக்கு முன்னேறிய வீரர்கள் பட்டியலில் அமெரிக்காவின் ஜிம்மி கார்னோருடன் இணைந்து 3-வது இடத்தை நடால் பிடித்தார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (57 முறை) முதலிடத்திலும், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (46 முறை) 2-வது இடத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற  கால்இறுதியில் ரபெல் நடால்-டொமினிக் திம் மோதினர். சுமார் நான்கு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் டொமினிக் திம் 7-6, 7-6, 4-6, 7-6 என வெற்றி பெற்றார். இத்தோல்வியின் மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பெடரருடன் (20) பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை நடால் (19) கோட்டை விட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து