விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் இழப்பீடு: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Tamil-Nadu-Assembly 2020 02 14

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று 2020- 2021-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கடந்த வருட வரவு- செலவுத் திட்டத்தில் நான் அறிவித்ததின்படி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.) இணைந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பயனடையும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இயற்கை மரணங்களில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புதிய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து