தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      தமிழகம்
Tamilnadu Assembly 2020 02 20

சென்னை : தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, சட்டசபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் நேற்று ஒத்திவைத்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில், துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 17-ல் கூட்டத்தொடர் தொடங்கியது. பின்னர் பட்ஜெட் மீது பொது விவாதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு 4 நாட்கள் பரபரப்பாக நடந்த பட்ஜட் கூட்டத் தொடர் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து