முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு: அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஏ.டி.ஜி.பி.க்களாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக போலீசில் உள்ள அதிகாரிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து 2020 - 21 ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் அனுமதித்துள்ளது.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் , உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் அடங்கிய குழு பதவி உயர்வு பட்டியல் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தியது.இது தொடர்பாக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில், தற்போது ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், சந்திப் மிட்டல், பாலநாகதேவி, சேசசாயி ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி., அந்தஸ்து வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் 1995-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளாக இருக்கிறார்கள். இவர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டு புதிய பணியிடங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து