எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அருகே கேரள அரசு பஸ் - டேங்கர் லாரி மோதிய கோரவிபத்தில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதிகாலையில் நடந்த இந்த பயங்கர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் தற்போது வரை நான்கு பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் மற்றும் கோவை அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவ இடத்திற்குச் நேரில் வந்து பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது:
கேரள அரசு சொகுசு பேருந்தில் 48 பேர் பயணம் செய்து வந்துள்ளனர். விபத்தில் இறந்த, காயமடைந்தவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பேருந்து கேரளா அரசின் சொகுசு பேருந்து என்பதால் பாலக்காடு மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரளாவில் இருந்து ஒரு குழு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தீயணைப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் காவல் துறையும், வருவாய் துறை அலுவலர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்பட்டு கேரளா அரசுக்கு தெரிவித்து அரசு நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்து லாரி டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மேலும் அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து தகவலுக்கு 97466 40662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணையும் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவினாசி கோர விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்ததில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பைக் கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்த ஓட்டுநர் உள்ளிட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்த மீட்பு பணிகளுக்காக கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன், வேளாண் அமைச்சர் சுனில்குமார், ஆலத்தூர் எம்.பி.ஹரிதாஸ், பாலக்காடு எம்.பி.சாபிபரம்பில் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் இறந்த, காயம் அடைந்தவர்கள் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் கேரள முதல்வர் உத்தரவின் பேரில் விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும், மரணமடைந்தவர்களின் உடல்களை கேரளாவுக்கு கொண்டு வர 20 ஆம்புலன்ஸ்கள் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து பலர் திருப்பூர் வந்திருந்தனர் அவர்களிடம் பிரேத பரிசோதனை முடித்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் சிலர் கேரள மருத்துவ மனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற காயமடைந்தவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள அரசின் "பஸ் டே" அன்று நடந்த கோர விபத்து
கேரள மாநிலத்தின் அரசு பேருந்து துவக்கப்பட்ட நாளில் அரசு சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் அம்மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி கேரள மாநிலத்தில் 'பஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கேரள அரசு பேருந்து துவக்கப்பட்டு 82-ம் ஆண்டு தினமாகும். 1938-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி ஸ்ரீ சித்திரை திருநாள் மன்னர், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" எனும் பெயரில் பேருந்து போக்குவரத்தை துவக்கி வைத்தார். முதல் நாள் பேருந்து பயணத்தில் மன்னரும், அவரது உறவினர்களும் பயணம் செய்து முதல் அரசு பேருந்து பயணத்தை துவக்கி வைத்து உள்ளனர்.
1965-ம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சி. எனும் கேரள அரசின் போக்குவரத்து துறை துவக்கப்பட்டாலும், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" துவக்க நாளை அடிப்படையாக கொண்டே பிப்ரவரி 20-ம் தேதி பஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் அவிநாசி அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025