எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காபூல் : ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் வகையில் அமெரிக்கா மற்றும் தலிபான் அமைப்பு இடையே ஒரு வார போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.
தலிபான் அமைப்பினரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நடத்திய தாக்குதலால் 2001 முதல் ஆப்கானிஸ்தான் அமைதி இழந்து காணப்படுகிறது. ஆப்கனில் தேர்தல் மூலம் அரசுகள் பதவியேற்றும் தலிபான் ஆதிக்கம் காரணமாக அமெரிக்க துருப்புகள் அந்நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தலிபான்கள் உடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாரான அமெரிக்கா, மோதல் காரணமாக பலமுறை பின்வாங்க நேர்ந்தது.
இந்நிலையில், தலிபான், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் அரசு தரப்பு மத்தியில் ஒரு வார கால போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் காணி, முப்படைத் தளபதி என்ற முறையில் எமது படைகள் போர் நிறுத்தத்தை கடைபிடிக்கும் தலிபான்கள் உடன் ஒருவார காலம் அமைதி காக்கும் நேரம் தொடங்கியுள்ளது. ஒருவார அமைதி காக்கும் நேரத்தில், சுய பாதுகாப்பில் மட்டும் ஆப்கன் படைகள் ஈடுபடும். அல்கொய்தா மற்றும் இதர தீவிரவாத அமைப்புகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் தலையிட மாட்டோம். ஆப்கன் படைகள் தற்காப்பு பணியில் மட்டுமே ஈடுபடும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, வன்முறை இல்லாத அமைதி நீடித்தால் வரும் 29-ம் தேதியன்று தலிபான் அமைப்புடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு அமெரிக்கா துருப்புகள் படிப்படியாக வாபஸ் பெறப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அஷ்ரப் காணி வெற்றி பெற்றது, அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது வெற்றியை ஏற்க மறுத்துள்ள எதிர்க்கட்சிகள் தரப்பு தலைவர் அப்துல்லா அப்துல்லா, தாமே வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானில் புதிய உள்நாட்டு குழப்பம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |