ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழா ரத்து .

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      உலகம்
Japan king birthday cancel 2020 02 24

ஜப்பான் : கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜப்பான் மன்னரின் பிறந்த நாள் விழாவை யொட்டி  மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சீனாவைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் என 28 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதனால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சீனாவுக்கு விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன.

ஜப்பானிலும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஜப்பான் மன்னர் நருஹிட்டோவுக்கு 60 - வது பிறந்த நாள் ஆகும். வழக்கமாக மன்னரின் பிறந்த நாள் விழாவையொட்டி  ஜப்பான் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டும். மன்னரின் அரண்மனைக்கு அருகில் ஏராளமானோர் திரண்டு நின்று வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் கொரோனா பீதி காரணமாக மன்னரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எளிமையாகவே நடந்தன. அரண்மனை அருகே மக்கள் கூடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து