முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவும் பகலும் உழைக்கிறார் - அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவும், பகலும் உழைக்கிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்புடன் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்தார். விமானத்தில் இருந்து இறங்கிய டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார்.டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். பிறகு டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப். பின்னர் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சிக்காக உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்திற்கு வந்தடைந்தார் அதிபர் டிரம்ப். அவர்கள் வந்த வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு அளித்தனர். சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பிரதமர் மோடியும், டொனால்டு டிரமப்பும் மேடைக்கு வந்தனர். பிறகு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. பிரதமர் மோடி முதலில் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நமஸ்தே என கூறி தனது பேச்சை தொடங்கினார். பேச்சை முடிக்கும் போது இந்தியாவை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்று கூறி முடித்தார்.

முன்னதாக டிரம்ப் பேசியதாவது:-

5 மாதங்களுக்கு முன்பு டெக்சாஸில் உள்ள ஒரு மாபெரும் கால்பந்து மைதானத்தில் அமெரிக்கா உங்கள் மாபெரும் பிரதமரை வரவேற்றது. இன்று அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் எங்களை வரவேற்கிறது இந்தியா. இந்த விருந்தோம்பலை நாங்கள் எப்போதும் மறக்கமாட்டோம். இந்தியா நம் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிக்கும்.இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடாக அமெரிக்க திகழும் பிரதமர் மோடி 'டீ வாலா ' என்று தனது வாழ்வை தொடங்கினார். அவர் தேநீர் விற்பனையாளராக பணியாற்றினார். எல்லோரும் அவரை நேசிக்கிறார்கள். ஆனால் இதை நான் உங்களுக்குச் சொல்வேன். அவர் மிகவும் கடினமானவர்.அன்று டீ விற்றவர். இன்று நாட்டின் பிரதமர்  மோடி நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டும் அல்ல, கடின உழைப்பு மற்றும் பக்தியால், இந்தியர்கள் எதையும், எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணமாக வாழ்கிறீர்கள். இந்தியாவிற்காக பிரதமர் மோடி இரவும் பகலும் உழைக்கிறார். இணையதளம், சமையல் எரிவாயு இணைப்பை நாடு முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் பிரதமர் மோடி என்று புகழ்ந்தார் டிரம்ப். மேலும் பேசிய டிரம்ப் உலகின் மிகச்சிறந்த விளையாட்டு வீரர் விராட் கோலி என்று புகழ்ந்து பேசினார். இந்தி திரைப்படங்கள் உலகம் முழுவதும் விரும்பி பார்க்கப்படுகிறது என்று கூறிய அவர் இந்திய மக்கள் ஒற்றுமையோடு வாழ்வதாகவும் பாராட்டி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து