முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.387.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை ஜனவரி இறுதிக்குள் திறக்கப்படும்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் கடந்த 11.08.2018 அன்று மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதன் விளைவாக அதிகபடியான உபரி நீர் காவேரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் வெள்ள நீர் முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றின் வழியாக அதிக பட்சமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மேலணையின் 9 மதகுகள் இடிந்து விழுந்ததில் பாலம் இரண்டாக பிளந்தது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஆயிரகணக்கான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு தடை ஏற்பட்டது.

இதையறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 24.08.2018 அன்று நேரடியாக முக்கொம்பு மேலணைக்கு வந்து ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து மேலணையில் காவேரி ஆற்றில் புதிய கதவணை கட்டப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். பின்னர் ரூ. 387 .60 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு எல் அண்டு டி நிறுவனத்தின் மூலம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இரவு பகலாக இந்த பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிற்பகல் முக்கொம்பில் உள்ள காவேரி ஆற்றுக்கு கார் மூலம் வந்தார்.

அவருடன் பொதுப்பணித் துறை அரசு அதிகாரிகள், திருச்சி மாவட்ட கலெக்டர், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் உடன் வந்தனர். பின்பு முதலவர் பழனிச்சாமி மதகுகள் கட்டப்படும் பள்ளத்திற்குள் இறங்கி பார்வையிட்டார். அங்கு இருந்த கட்டுமான அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர்களை அழைத்து விளக்கம் கேட்டு அறிவுரைகளை வழங்கினார். சுமார் ஒரு மணி நேரம் முதல்வர் பழனிசாமி அங்கேயே இருந்து கட்டுமான பணிகளை பார்வையிட்டு விட்டு புறப்பட்டு சென்றார் . முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேலணையின் கதவணையின் பாலம் அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்று அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து