முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு: வாசிம் ஜாபர் அறிவிப்பு

சனிக்கிழமை, 7 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை, : அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார்.

2000-ம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமானவர் வாசிம் ஜாபர் (42). 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 212 ரன்களை குவித்தது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.  ஒரு நாள் போட்டிகளில் அதிகம் விளையாடாத ஜாபர் 2000 முதல் 2008 வரை இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். வலது கை பேட்ஸ்மேனான இவர்  31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 இரட்டை சதங்கள் உள்பட 5 சதங்களை விளாசி மொத்தம் ஆயிரத்து 944 ரன்கள் அடித்துள்ளார். 2008-க்கு பின்னர் இந்திய அணியில் இடம் கிடைக்காத நிலையில் உள்ளூர் போட்டிகளான ரஞ்சி கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வந்தார். விதர்பா அணிக்காக விளையாடிவந்த இவர் ரஞ்சிக் கோப்பையில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்நிலையில்,  42 வயது நிரம்பிய வாசிம் ஜாபர், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து