முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சைக்காக 4 மாடி கட்டிடத்தை வழங்கத் தயார் : இங்கிலாந்து குத்துச்சண்டை வீரர் சொல்கிறார்

வியாழக்கிழமை, 26 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : இங்கிலாந்து குத்துச்சண்டை வீரரான அமிர் கான், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனது நான்கு மாடி கட்டிடத்தை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு உலகளவில் இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியோனோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரபலங்கள் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க நிதியுதவி செய்து வருகிறார்கள். 

இந்நிலையில் இங்கிலாந்தின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான முன்னாள் உலக சாம்பியன் அமிர் கான் 60 ஆயிரம் சதுர அடி கொண்ட தனது நான்கு மாடி கட்டிடத்தை கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வழங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து