முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு: ரிசர் வங்கி கவர்னர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 27 மார்ச் 2020      வர்த்தகம்
Image Unavailable

ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொதுமக்கள் தொடங்கி கூலித் தொழிலாளர்கள், தனியார் துறை ஊழியர்கள் என பல தரப்பினரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அனைத்து தொழில் துறைகளும் முடங்கி இருக்கின்றன. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதி சலுகைகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:-

ரெப்போ வட்டி  விகிதம் 4.4 ஆக குறைக்கப்படும். ரிவர்ஸ் ரெப்போ 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. பொருளாதார ஸ்திரதன்மையை காக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.  பொருளாதார வீழ்ச்சியை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.  இதுபோன்ற நிச்சயமற்ற தன்மை இதுக்கு முன்பு இருந்ததில்லை. பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து