முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான போராட்டம் கடினமானது : கேப்டன் கோலி உருக்கமான வேண்டுகோள்

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : அரசின் உத்தரவை கடைப்பிடித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் மீண்டும் ஒரு முறை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 871 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவை நாடு முழுவதும் அமல்படுத்தியது.  ஆனால் இந்த உத்தரவை மதிக்காமல் சிலர் கும்பலாக வெளியே சுற்றுகிறார்கள். இதனால் பல்வேறு விழிப் புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் அரசின் உத்தரவை கடைப்பிடித்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் மீண்டும் ஒரு முறை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

நான் ஒரு கிரிக்கெட் வீரராக பேசவில்லை. இந்திய குடிமகனாக பேசுகிறேன். கடந்த சில தினங்களாக மக்கள் கும்பலாக செல்வது, ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நடப்பது, அரசை மதிக்காமல் செயல்படுவது போன்றவை கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளதையே காட்டுகிறது. ஆனால் உண்மையிலேயே இந்தப் போராட் டம் சுலபமானது இல்லை. கடினமான போராட்டமாகும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் அரசு கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் அசட்டுத்தனமாக வெளியே சுற்றுவதனால் உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். இதனால் வீட்டிலேயே இருங்கள். நாம் நமது கடமையை செய்தால் மட்டுமே இந்த போராட்டத்தில் வெற்றி பெற முடியும். விதிகளை மீறுவது நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகும். உங்களைப் போலவே நானும் தற்போது உள்ள சூழல் சரியாக வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே அரசின் வழிகாட்டு தலை கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

இவ்வாறு விராட்கோலி கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து