முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அற்புதமான 50 - சுரேஷ் ரெய்னாவை பாராட்டிய பிரதமர் மோடி

ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்புக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரசால் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பல்வேறு பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை மக்கள் வழங்கலாம் என்று பிரதமர் மோடி நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையே, பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனா வைரஸ் பாதிப்புக்காக பிரதமரின் நிவாரண நிதி மற்றும் உ.பி. மாநில அரசின் நிவாரண நிதிக்கு ரூ. 52 லட்சம் நிதியுதவி வழங்கினார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சுரேஷ் ரெய்னாவின் அற்புதமான 50 என பாராட்டு தெரிவித்துள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து