முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபருடன் கைகுலுக்கிய டாக்டருக்கு கொரோனா பாதிப்பு- புடினுக்கு தொற்று இல்லை என உறுதி

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

ரஷ்ய அதிபர் புடினுடன் கை குலுக்கிய டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் புடினுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 2 ஐரோப்பிய நாடுகளும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவை பொறுத்தமட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு 27-வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷ்யா இருந்தது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து, தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறும் நபர் களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து அவருடன் கை குலுங்கிய டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆஸ்பத்திரிக்கு அதிபர் புடின் நேரில் சென்று ஆய்வு செய்தார். முக கவசம், கையுறைகள் என எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் சாதாரணமாக ஆஸ்பத்திரி நடவடிக்கைகளை புடின் ஆய்வு செய்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கை குலுக்குவது, கட்டி தழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோ என்பவருடன் புடின் சகஜமாக கை குலுக்கினார். இந்த நிலையில், டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அதே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அதிபர் புடினுடன் நெருக்கமாக இருந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டாக் டரிடம் இருந்து அவருக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.  ஆனால் புடின் வழக்கம் போல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து