முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா என்று வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      சினிமா
Image Unavailable

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் கொரோன வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியவர்கள் குறித்து கேரளா போலீஸ் விசரித்து வருகிறது.

இது தொடர்பாக வெளியான வீடியோவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் நடிகர் மோகன்லால் உயிரிழந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டன. இதனைப் பரப்பியவர் யார் இதன் மூலம் எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர், இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள முதல்வர் பினராய் விஜயன் கடந்த வியாழன்று கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். கேரளாவில் சமூக ஊடகங்களில் மருத்துவர் என்ற பெயரில் பலரும் கொரோனா வைரசுக்கு மருந்துகள் பரிந்துரை செய்து வருகின்றனர், இது ஆபத்தான போக்கு என்று பினராய் விஜயன் எச்சரித்தார். போலி செய்திகள் பரப்புவோர் மீது போலீசார் கூடுதல் கவனம் மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் ஊரடங்கின் போது மோடி கைதட்டச் சொன்னார் என்று மோகன்லால் கைதட்டல் பற்றி பதிவிடும் போது, கைதட்டல் என்ற செயல்முறை ஒரு மந்திரம் போன்றது இதன் மூலம் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் அழியும் என்று பதிவிட்டதை பலரும் கடுமையாக கேலி, கிண்டல் செய்தனர். அவர் படத்தில் வரும் வசனங்களை வைத்தே மோகன்லாலின் இந்தக் கூற்றை மீம்கள் மூலம் கிண்டல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து