கொரோனாவுக்கு உயிரிழக்கும் போலீசார் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்: மராட்டிய அரசு

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      இந்தியா
Ajit Pawar 2020 04 04

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் யாரும் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று மராட்டிய துணை முதல்வர் அஜித்பவார் அறிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சினை தொடர்பாக மராட்டிய துணை முதல் -மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித்பவார் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசார், சுகாதாரத்துறையினர், மருத்துவ கல்வி துறையினர் உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் யாரும் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து