முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்டத்தில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை தூக்கில் போட வேண்டும் : பாக். முன்னாள் கேப்டன் மியாண்டட் ஆவேசம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கராச்சி : கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களை தூக்கில் போட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ஜாவித் மியாண்டட் அவரது யூடியூப் சேனலில் பேசுகையில் கூறியதாவது: 

கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் உள்பட எத்தகைய சூதாட்டத்திலும் ஈடுபட்டு அணிக்கோ, நாட்டுக்கோ அவப்பெயர் ஏற்படுத்தும் வீரர்கள் மீது எனக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை தூக்கில் போட வேண்டும். ஏனெனில் இதுவும் ஒருவரை கொலை செய்வது போன்ற குற்றம் தான். எனவே இதற்கான தண்டனை கொலை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படுவது போல் இருக்க வேண்டும். சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்து முன்னுதாரணத்தை உருவாக்கினால், எந்தவொரு வீரரும் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள். 

சூதாட்டம் என்பது எங்களது மத கொள்கைக்கு (இஸ்லாம்) எதிரான விஷயமாகும். மத போதனைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறு இழைக்கிறது. இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை மீண்டும் விளையாட அனுமதிப்பவர்கள் தங்களது செயலை நினைத்து வெட்கப்பட வேண்டும். சூதாட்ட செயலில் ஈடுபடும் வீரர்கள் தங்களது சொந்த குடும்பத்துக்கோ, பெற்றோருக்கோ கூட உண்மையாக இருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். அப்படியிருந்தால் அவர்கள் ஒரு போதும் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள். ஆன்மிக ரீதியாக அவர்கள் தெளிவற்றவர்கள். மனிதநேய அடிப்படையில் இதுமாதிரியான செயல்பாடுகள் சரியானது கிடையாது. இவ்வாறு ஜாவித் மியாண்டட் கூறியுள்ளார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து