முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும்? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

 கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் கூறியுள்ளது. 

அதே சமயம் வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், பிளீச் அல்லது சோப் உபயோகித்து கொரோனா வைரசை கொன்று விடலாம் எனவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. அச்சடித்த காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாகவும், மரப்பலகை, மற்றும் துணிகளில் 2 நாட்களுக்கும் அது உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வை நடத்திய லியோ பூன் லிட்மேன், மாலிக் பீரிஸ் என்ற இரு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே முக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது முகவும் முக்கியம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். நேச்சுர் இதழில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட கொரோனா வைரஸின் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் மற்றும் எஃகு ஆகியவற்றில் 72 மணி நேரம் வரை வைரஸ் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்,

ஆனால் தாமிரத்தில் நான்கு மணி நேரத்திற்கும் அல்லது அட்டைப் பெட்டியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கவில்லை. மேலும் மளிகைப் பொருட்கள் போன்ற பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வரும் போது மக்கள் என்ன வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் கை கழுவுதல் முதலிடத்தில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து