எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே, ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை இதன்மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார். அந்த அணிக்கு ஆலன் பார்டரை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.ஷேன் வார்னே தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. மார்க் வாக், 2. ஆடம் கில்கிறிஸ்ட், 3. ரிக்கி பாண்டிங், 4. டீன் ஜோன்ஸ், 5. மைக்கேல் கிளார்க், 6. ஆலன் பார்டன் (கேப்டன்), 7. மைக்கேல் பெவன், 8. ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், 9. பிரெட் லீ, 10. கிரேக் மெக்டெர்மோட், 11. கிளென் மெக்ராத்.
மார்க் வாக் அல்லது மேத்யூ ஹெய்டன் ஆகியோரில் ஒருவர் என்று வரும் போது மார்க் வாக்கை தேர்வு செய்தேன். டீன் ஜோன்ஸ் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவதில் மிகவும் சிறந்தவர். இதனால் அவரை தேர்வு செய்தேன். மைக்கேல் பெவன் தலைசிறந்த மேட்ச் வின்னர். சைண்ட்ஸ் அடித்து ஆடும் பேட்ஸ்மேன். அதே சமயத்தில் பந்தும் வீசக்கூடியவர் எனக் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025