எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டித்தால் நாங்கள் ஆதரிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவ்வாறு விலை உயர்ந்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலை என்னவாகும்?. ஏற்கனவே வேலை இல்லாமல் அந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் எடியூரப்பா கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி, பழங்களை கொள்முதல் செய்ய யாரும் முன்வரவில்லை என்று விவசாயிகள் என்னை தொடர்பு கொண்டு கூறி வருகிறார்கள். அதே போல் நெல், ராகி போன்றவற்றையும் கொள்முதல் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். கர்நாடகத்தில் சில பகுதிகளில் அதிக மழை பெய்ததால் விளை பயிர்கள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக பல்லாரி, ராய்ச்சூர், கொப்பல் உள்ளிட்ட பகுதிகளில் நெல், கரும்பு, வாழை பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. எங்கெங்கு சேதம் ஏற்பட்டுள்ளதோ அங்கு ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். முதல்வர் எடியூரப்பா என்னை தொலைபேசியில் அழைத்து, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை குறைப்பதாக கூறினார். இதற்கு எனது ஆதரவு உண்டு. நெருக்கடியான சூழ்நிலையில் அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ரேணுகாச்சார்யா, பசனகவுடா பட்டீல் யத்னால் ஆகியோர் முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்கள் 2 பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்களில் யாராவது, உள்நோக்கத்துடன் தகவல் தெரிவிக்காவிட்டால் அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அந்த மதத்தினரை குறிக்கோளாக வைத்து விமர்சிப்பது சரியல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் தவறாக சித்தரிப்பது உள்நோக்கம் கொண்டது. அந்த 2 எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ய வேண்டும். முதல்வரின் செயலாளர் பதவியில் இருந்து ரேணுகாச்சார்யாவை நீக்க வேண்டும். ஏனென்றால் அவர் என்ன கருத்து கூறினாலும், அது முதல்வரின் கருத்தை போன்றது. எம்.எல்.ஏ. பதவியில் இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுவது சரியல்ல. துப்பாக்கியால் சுட்டு கொல்லுங்கள் என்று சொல்வது சரியா?. இவ்வாறு நடவடிக்கை எடுக்க எந்த சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துகளை கூறுவதை நான் கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதை நான் எதிர்க்கிறேன்.அவர்கள் ஏற்கனவே ஒரு நாள் சம்பளத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அது போதும் என்பது எனது கருத்து. கொரோனாவை தடுக்க தேவைப்பட்டால் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை அதிகமாக குறைக்கட்டும். கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் ஒருவேளை ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டால் அதை நாங்கள் ஆதரிப்போம். அதற்கு மாநில மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற அனைத்தையும் முடக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Jul 2025சென்னை, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ரூ.38 கோடியில் இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
07 Jul 2025சென்னை, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று
-
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவு தமிழக அரசிதழில் வெளியீடு
07 Jul 2025சென்னை, திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
07 Jul 2025சென்னை, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது: கேப்டன் சுப்மன் கில்
07 Jul 2025பர்மிங்காம் : கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வெளிநாட்டு மைதானத்தில் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த இந்திய இளம் அணி
07 Jul 2025பர்மிங்காம் : வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.