முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் மற்றும் விமான போக்குவரத்தை 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம்: பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் கடிதம்

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

ஏப்ரல் 30-ம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்தை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரும் 30-ம் தேதி வரை ரயில்களை இயக்க வேண்டாம் என மத்திய அரசை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நாடுமுழுவதும் கொரோனா பரவுதல் இன்னமும் குறையவில்லை. இதனை கட்டுப்படுத்த சமூக விலகல் என்பது மிகவும் அவசியமான ஒன்று. எனவே கட்டுப்பாடுகள் தொடர வேண்டும். வரும் 30-ம் தேதி வரை ரயில்களை இயக்க வேண்டாம். விமான போக்குவரத்தையும் வரும் 30-ம் தேதி வரை தொடங்க வேண்டாம். அது போலவே கல்வி நிறுவனங்களை ஜூன் மாதம் 17-ம் தேதிக்கு முன்னதாக திறக்க வேண்டாம். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து