முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரசால் வந்த வினை 160 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்

வெள்ளிக்கிழமை, 1 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

நியூயார்க் : கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக முறை சாரா பொருளாதாரத்தில் 160 கோடி பேர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். 

கொரோனா வைரஸ் கொலைகார வைரஸ் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கிற தொழிலாளர் விரோத வைரசாகவும் உள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய இந்த கண்ணுக்குத் தெரியாத வைரஸ், ஏறத்தாழ 200 நாடுகளில் பரவி விட்டது.இந்த வைரஸ் 32 லட்சத்துக்கும் அதிகமானோரை உலகமெங்கும் தாக்கி இருக்கிறது. 2 லட்சத்து 30 ஆயிரம் பேரின் உயிரையும் பறித்து இருக்கிறது.

இதன்காரணமாக செய்வது அறியாது உலக நாடுகள் அனைத்தும் கலக்கமுற்று இருக்கின்றன.இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உலக வர்த்தகமே முடங்கி கிடக்கிறது.

இந்த தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு, கொரோனா வைரஸ் பரவிவருகிற சூழலில் தனது மூன்றாவது கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.அதில் இடம்பெற்றிருக்கிற தகவல்கள் தொழிலாளர்கள் இனத்துக்கு எச்சரிக்கை மணி அடிப்பதுபோலவே இருக்கின்றன.

உலகமெங்கும் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 330 கோடி, அவர்களில் 200 கோடி பேர் முறை சாரா பொருளாதாரத்தின் கீழ்தான் வேலைகளை பெற்றிருக்கிறார்கள். இவர்கள்தான் தொழிலாளர் சந்தையில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் என சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவி வருவதின் காரணமாக முறை சாரா பொருளாதாரத்தில் 160 கோடி பேர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்து வருகிறார்கள்.

உலக மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்கு இருக்கிற இவர்கள் தங்களது வேலைகளையும், வாழ்வாதாரத்தையும் இழக்கிற ஆபத்து, கழுத்தின் மேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருப்பதை இந்த அறிக்கை படம் பிடித்துக்காட்டுகிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து